“டேய் நீங்க பண்ண வேலையால் கரு கலைஞ்சி போச்சி” -புது பெண்ணுக்கு மாமனார் ,மச்சினரால் நேர்ந்த கதி

 

டெல்லியில் உள்ள காஜிபூரைச் சேர்ந்த ஷிவானி சர்மா ,ஒரு வருடத்திற்கு முன்பு, கிரேட்டர் நொய்டாவில் உள்ள டான்கூரைச் சேர்ந்த சுஷில் என்பவரை மணமுடித்தார்.அதன் பிறகு அந்த தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்ததன் விளைவாக பெண் கர்ப்பமானார் .அந்த பெண் கர்ப்பமாக இருக்கும் போது அந்த புகுந்த வீட்டிலிருந்த அந்த பெண்ணின் மாமனார் ,மச்சினர் மற்றும் வீட்டிலுள்ள உறவினர்களால் அவர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தப்பட்டார் .

அதன் காரணமாக அந்த பெண் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் .அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அந்த குடும்பத்திலிருந்த மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொடுமை செய்தனர் .அதனால் அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது .

அதன் பிறகு அவர் அந்த வீட்டிலிருந்து தப்பி வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார் .பொலிஸார் அந்த பெண்ணின் புகுந்த வீட்டினர் ஏழு பேர் மீது வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர் .

Contact Us