அமெரிக்காவில் குலுக்கல் முறையில் விசா; வெளியானது அறிவிப்பு

 

அமெரிக்காவில் நிரந்தர வதிவிடவுரிமை விசா (கிறீன் கார்ட்) பெறுவதற்காக குலுக்கல் முறையில் 50,000 பேரை தெரிவுசெய்தவற்கான குலுக்கலுக்கு (Diversity Visa Program) இணையவழியிலான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க அரசு வருடாந்தம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50,000 பேரை குலுக்கல் முறையில் தெரிவு செய்து நிரந்தர வதிவிட உரிமை வழங்கி வருகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இதற்காக வருடாந்தம் லொத்தர் குலுக்கல் நடத்தப்படுகிறது. இக்குலுக்கல் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கு இலங்கையர்களும் தகுதியுடையோர் ஆவர்.

dvprogram.state.gov எனும் இணையத்தளம் மூலம் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். வரும் 2023 ஆம் ஆண்டில் அமெரிக்க கிறீன்கார்ட் பெறுவதற்கான DV-2023 திட்டத்துக்கு 2021 ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் 2021 நவம்பர் 9 ஆம் திகதி அமெரிக்க கிழக்குப் பிராந்திய நேரப்படி நண்பகல் 12.00 மணிவரை (இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிவரை) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்தில் ஒருவர் பிரதான விண்ணப்பதாரியாக ஒரு தடவை மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். இதேவேளை மேற்படி இணையத்தளத்தில் விண்ணப்பிப்பதற்கு கட்டணம் எதுவும் அறவிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us