விஜய் ரசிகர் மன்றத்தின் வெற்றியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது: அவர் ரஜனி காந்த் போல தான்… வரும்… ஆனா வராது

புதுக்கோட்டையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்ற அரசுக்கு மக்கள் கொடுத்த பரிசு, இது என்று கூறியுள்ளார். விஜய் ரசிகர் மன்றத்தினர் தற்போது ஊராட்சித் தேர்தலில் உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். அது நல்ல விஷயம் தான். ஆனால், விஜய் ரசிகர் மன்றத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ரஜினிகாந்த் வருகிறேன், வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் அவர் வரவில்லை. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொண்டு வருகிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ..

நிலைக்க வேண்டுமே ? என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முதல் கொண்டு, இன்று தி.மு.கா செயலாளர்கள் வரை விஜய் தொடர்பாக தான் பேசுகிறார்கள். இவர்கள் பேசுகிறார்கள் என்றாலே, ஆட்டம் கண்டு விட்டார்கள் என்பது தான் அதன் பொருளாக உள்ளது.

Contact Us