மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்.. 37 பேர் உயிரிழப்பு.. ஆப்கானிஸ்தானில் பயங்கரம்..!!

 

ஆப்கானிஸ்தானை, தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா பிரிவு முஸ்லிம்கள் மற்றும் தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சமீப நாட்களில், ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்களின் மசூதிகளில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காந்தஹார் நகரில் இருக்கும் மிகப்பெரிய மசூதி ஒன்றில் நேற்று, தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காந்தஹாரில் இருக்கும் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்களின் மசூதியில், வெள்ளிக்கிழமைக்கான சிறப்பு தொழுகை நேற்று நடந்திருக்கிறது.
இதில், 500-க்கும் மேற்பட்ட ஷியா பிரிவு முஸ்லிம்கள் பங்கேற்றனர். அப்போது, திடீரென்று பயங்கரமான வெடிகுண்டுகளை, உடலில் கட்டிக்கொண்டு வந்த 2 தீவிரவாதிகள் மசூதியின் நுழைவு வாயிலில் நின்று தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அந்த பகுதியே அதிர்ந்துபோனது.
தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதல்களில், 37 நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 70-க்கும் அதிகமான நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளனர். எனவே, உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Contact Us