ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம்…. அப்படி என்ன இதுல இருக்குனு நீங்களே பாருங்க….!!!

 

நாம் வாங்கும் ஒரு தண்ணீர் பாட்டிலின் அதிகபட்ச விலை 20 ரூபாய் தான். ஆனால் இந்த தண்ணீர் பாட்டிலின் விலை என்னவோ 44 லட்சம். இதை நிச்சயம் உங்களால் நம்ப முடியாது. இருந்தாலும் இதுதான் உண்மை. இந்த பாட்டிலின் விலை ஏன் இவ்வளவு விலை தெரியுமா?இந்த பாட்டில் முழுவதும் 24 கேரட் தங்கத்தால் ஆனது. மிகப் பிரபல பாட்டில் வடிவமைப்பாளர் பெர்னாண்டோ அல்டமிரனோ என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் எதிர் துருவங்களில் உள்ள பிரான்ஸ், பிஜி நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் இதில் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை குடித்தால் அதிக உத்வேகம் கிடைக்கும். அதிக சுவையாக இருக்கும். இதுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம். இதுதான் உலகத்திலேயே மிக அதிக விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில்.

Contact Us