“பேஷண்ட் பெட்லே வச்சி நாசப்படுத்திட்டார்…” -ஒரு பெண் டாக்டருக்கு நடந்த விபரீதம்

 

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) ஒரு மூத்த மருத்துவர் பணியாற்றி வந்தார் ,அந்த மூத்த மருத்துவரிடம் பல பெண் உதவி மருத்துவர்கள் பணி புரிந்தனர் .இந்நிலையில் அந்த மூத்த மருத்துவர் , அவரிடம் பணியாற்றும் ஒரு உதவி பெண் மருத்துவர் மீது ஆசை வைத்தார் .அதனால் அவரை அடைய பலமுறை வலை விரித்தார் .ஆனால் அவர் சிக்காமல் அவரிடமிருந்து தப்பித்து வந்தார் .
இந்நிலையில் செப்டம்பர் 26 அன்று அந்த ஹாஸ்ப்பிட்டல் வளாகத்திற்குள் அந்த ஹாஸ்ப்பிட்டல் ஊழியர் ஒருவரின் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போது அந்த விழாவில் அந்த ஹாஸ்பிடலில் இருந்த அனைவரும் ஒன்று கூடி இருந்தனர் .அப்போது அந்த மூத்த மருத்துவர் அந்த உதவி பெண் மருத்துவரை அங்குள்ள ஒரு பேஷண்ட் ரூமில் வைத்து பலாத்காரம் செய்து விட்டார் .அதன் பிறகு அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .பின்னர் அந்த பெண் மருத்துவர் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த மூத்த மருத்துவர் மீது அக்டோபர் 11 ஆம் தேதி புகார் கொடுத்தார் .அந்த புகாரினை பெற்ற போலீசார் அந்த மருத்துவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர் .இப்போது தப்பியோடிய அவரை தேடி வருகின்றனர் .

Contact Us