கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிக உயரமான பெண்!

உயரத்தைக் கொண்ட துருக்கியைச் சேர்ந்த ரூமேசா கேல்கி (Rumeysa Gelgi ) உலகின் மிக உயரமான பெண் என்ற கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.

24 வயது கேல்கி  (Rumeysa Gelgi ) ஏற்கனவே, 2014 ஆம் ஆண்டில் உலகின் ஆக உயரமான பதின்ம வயதுப் பெண் என்ற சாதனையைப் படைத்தார். 2.15 மீட்டர் உயரம் கொண்ட கேல்கியின் அதிக உயரத்துக்குக் காரணம், Weaver syndrome எனும் அதிவேக வளர்ச்சியை ஏற்படுத்தும் சுகாதாரப் பிரச்சினை என கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகம் கூறியது.

பொதுவாகச் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் கேல்கி (Rumeysa Gelgi ) , அவ்வப்போது ஊன்றுகோல் உதவியுடன் சிறிது நேரம் நடப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் கின்னஸ் உலகச் சாதனை வழி, தம்முடைய உடல்நிலை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க விரும்புவதாக கூறிய ரூமேசா கேல்கி (Rumeysa Gelgi ),

“எந்த ஒரு குறையும், பலமாக மாற்றப்படலாம். எனவே, உங்களின் இயல்பான நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களின் ஆற்றலை அறிந்து, முடிந்ததைச் செய்யுங்கள்” என்றும் ரூமேசா கேல்கி( Rumeysa Gelgi  ) கூறினார்.

Contact Us