மகனை கொடூரமாகக் கொன்று சாலையோரம் வீசிய பெற்றோர்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலையில் கடந்த 10ஆம் தேதி அன்று வாழைகிரி கிராமம் அருகே சாலையின் ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு வனத்துறையினர் தகவல் தெரிவிக்க, தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்திருந்தனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நடந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

சிசிடிவி காட்சி காட்சிகள் மூலமும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருந்தனர். கொடைக்கானல் வத்தலக்குண்டு நுழைவு வாயிலில் இருக்கும் சோதனைச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது சைலோ கார் கடந்த 6ஆம் தேதி இரவு 11 நேரத்தில் கொடைக்கானல் வத்தலக்குண்டு மலைச்சாலை நுழைவாயில் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லாமல் மூன்று மணி நேரத்திற்கு பின்னர் பாதி வழியிலேயே திரும்பி இந்த சோதனைச்சாவடி பகுதிக்கு வந்திருக்கிறது.

இதனால் சந்தேகம் கொண்ட போலீசார் அந்த கார் நம்பரை வைத்து விசாரித்த போது புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முகவரி கிடைத்துள்ளது. அந்தக் காரின் உரிமையாளர் ஜெகனை படித்து புலன்விசாரணை செய்ததில், முதலில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். துருவித்துருவி விசாரணை நடத்தியதில் கொடைக்கானல் சென்று வந்தது ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதையடுத்து தாண்டிக்குடி போலீசார் புதுக்கோட்டை விரைந்து சென்று ஜெகன் குடும்பத்தினரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதில் கொலைசெய்யப்பட்டு இறந்தவர் செல்லத்துரை என்பதும் அவர் ஜெகனின் அண்ணன் என்பதும் தெரிய வந்திருக்கிறது. மனவளர்ச்சி குன்றியவர் என்பதும் அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மனவளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்த அவர் தினமும் குடித்துவிட்டு வந்து பெண்களை கேலி செய்வதும் தொந்தரவு செய்வதுமாக இருந்திருக்கிறார். திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்திக்கிறார்.

இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற ஜெகனிடம், தாய் ராஜம்மாள் நமது குடும்ப மானத்தை கெடுத்து வருவதால் செல்லதுரையை கொன்றுவிட்டு கொடைக்கானல் மலையில் வீசி வருமாறு கேட்டிருக்கிறார். அதன்படி திட்டம் தீட்டப்பட்டு கடந்த 6ஆம் தேதி செல்லத்துரைக்கு தாயார் மற்றும் தம்பி ஜெகன் மூணு மது பாட்டு மதுபாட்டில்களை வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருக்கிறார்கள்.

மது போதையால் சுயநினைவை இழக்க வைத்து இருக்கிறார்கள். தந்தை திவ்யநாதன் உதவியுடன் ஜெகன் வைத்திருந்த சைலோ காரில் ஏற்றிச் சென்று காரின் பின் இருக்கையில் உள்ள இரும்பு ராடு எடுத்து கழுத்து மற்றும் தலை பகுதியில் பலமாக அடித்து கொலை செய்திருக்கிறார்கள். பின்னர் செல்லத்துரையின் இரண்டு கைகளையும் கட்டி கொடைக்கானல் வத்தலக்குண்டு மலைப்பாதையில் வாழகிரி அருகே சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் வீசிவிட்டு, மூன்று பெரும் கற்களை எடுத்து செல்லதுரைமீது மற்றும் உடல் , முகம் மீது வீசி சிதைத்துவிட்டு புதுக்கோட்டை திரும்பி இருக்கிறார்கள்.

புதுக்கோட்டையில் செல்லதுரையை காணவில்லை என்று போலீசில் புகாரளித்திருக்கிறார்கள்.

இதையடுத்து புதுக்கோட்டை திருமயம் பகுதியில் இருந்த செல்லதுரையின் அம்மா, அப்பா சகோதரர் ,உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து அவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய சைலோ கார் , ஸ்பானர் இரும்பு ராடு உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். இதன்பின்னர் தாண்டிக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Contact Us