தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்

 

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தாயின் மூன்றாவது கணவரால் இரு சிறுமிகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் இருவர் பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிராமத்தவர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாயும் இதற்கு உடந்தையாக இருந்ததால் அவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது.

இவர்களை கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

Contact Us