இவர்களை ஏற்பாடு செய்து தந்தால்…? 1,000 பிராங்குகள் சன்மானம்…. ஹோட்டல் நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு….!!

 

சுவிட்சர்லாந்து ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் பற்றாக்குறையின் காரணமாக பல உணவகம் அடைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல ஹோட்டல்கள் அடைக்கப்பட்டதால் அங்கு இருக்கக்கூடிய பணியாளர்கள் வேறு தொழில் தேடி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தற்போது ஹோட்டலில் பணிபுரிய பணியாளர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வாலைஸ் மாநிலத்தில் ஹோட்டல் மேலாளர் ஒருவர் காலி இடங்களை நிரப்புவதற்கு நூதன பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

அதன்படி Burchen பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் பணிபுரிய சமையல்காரரை ஏற்பாடு செய்து தரும் ஒருவருக்கு 1,000 பிராங்குகள் சன்மானம் கொடுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த வருடத் தொடக்கத்தில் இருந்தே தங்கள் ஹோட்டலில் சமையல் பணியாளர்களை பணியில் அமர்த்த தான் போராடி வந்துள்ளதாக அந்த மேலாளர் தெரிவித்துள்ளார். ஆகவே தற்போது சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கண்டிப்பாக தங்களின் முயற்சி பலனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Contact Us