“காரை கட்டிலாக்கி ,சீட்டை ‘பெட்’டாக்கி …”எஸ்யுவி காரில் நடந்த பலான தொழிலில் சிக்கிய பெண்கள்

 

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் லோனாவ்லா பகுதியில் கட்வரு ராஜ்பார் என்ற நபர் பல பெண்களை வைத்து காரிலேயே பலான தொழில் நடத்திவந்தார் .அவர் வாட்ஸ்அப்பில் பல பலான பெண்களின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பார் .பிறகு வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் பெண்களை அவர்கள் கூறும் இடத்திற்க்கே எஸ்யுவி காரில் கூட்டி வந்து தொழிலை அமோகமாக நடத்தி வந்தார் .அவரை பிடிக்க போலீசார் பல நாட்களாக திட்டமிட்டு தேடி வந்தார்கள் .

இந்நிலையில் அவர் லோனாவ்லா மலைப்பகுதியில் இருந்து செயல்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது .அதனால் போலீசார் அவரை பிடிக்க போலியான ஒரு வாடிக்கையாளரை செட்டப் செய்து பேசினார்கள் .அப்போது ஒரு பெண்ணை கூட்டி வர சொன்னார்கள்

பிறகு லோனாவ்லாவில் உள்ள வர்சோலிக்கு ஒரு பெண்ணைக் கூட்டி வருவதாக அவர் போலீசின் வாடிக்கையாளரிடம் கூறினார். இதன் மூலம், போலீசார் அவரை பொறி வைத்து, பிடிக்க எஸ்யூவியில் வந்த அவருக்காக காத்திருந்தனர். அப்போது அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்த அவரை கைது செய்தனர் .அவரிடம் நடத்திய ஆரம்ப விசாரணைக்குப் பிறகு, போலீசார் ராஜ்பர் மற்றும் இரண்டு பெண்களை கைது செய்தனர்.

Contact Us