“தூங்கிய கணவரை தூக்கிய மனைவி” -கள்ள உறவால் நேர்ந்த கொடுமை

 

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 35 வயதான தீப்தி படேல் என்ற பெண் அவரது கணவர் பிபிஞ்சந்திர பட்டேலுன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சவுரப் சுதர் என்ற நபருடன் கள்ள உறவு ஏற்பட்டது .அந்த உறவு நாளடைவில் அவரின் கணவர் பட்டேலுக்கு தெரிய வந்து அவர் தன்னுடைய மனைவியை கண்டித்தார் .

அதன் பிறகு அந்த பெண் இது பற்றி அவரின் காதலரிடம் கூறினார் .அந்த காதலரும் அந்த பெண்ணும் சேர்ந்து அந்த பெண்ணின் கணவர் பட்டேலை கொலை செய்ய முடிவு செய்தனர் .அவர்களின் திட்டப்படி அந்த கடந்த மாதம் அந்த கணவருக்கு சில தூக்க மாத்திரைகளை அந்த பெண் பாலில் கலந்து கொடுத்து தூங்க வைத்தார் .பின்னர் அவரின் கணவர் நன்றாக தூங்கியதும் அவரை தலையணை கொண்டு அழுத்தி அவரை மூச்சு திணற செய்து கொலை செய்தார் .

பின்னர் அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு மாரடைப்பால் இறந்து விட்டதக கூறி தூக்கி சென்றார் .ஆனால் அங்கு அவரை டெஸ்ட் பண்ண டாக்டர்கள் அந்த நபர் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர் .பின்னர் அவர்கள் போலீசில் புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டபோது அந்த பெண்ணும் அவரின் காதலரும் சேர்ந்து கொலை செய்ததை கண்டுபிடித்தனர் .

பிறகு அந்த இருவரும் போலீசால் கைது செய்யப்பட்டனர் .

Contact Us