பெண்களுக்கிடையில் சண்டை!! தடுக்கச் சென்ற குடும்பஸ்தர் மீது ஒரு பெண் கொலை வெறி தாக்குதல்!! குடும்பஸ்தர் பலி!!

 

தனிப்பட்ட மோதலொன்றைத் தடுக்கச் சென்ற 37 வயதான நபர் ஒருவர் கத்திக் குத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குருநாகல் மாவட்டம், மெதிரிகிரிய – பெரகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தனது வாகனப் பழுதுபார்ப்பு நிலையத்தில் பணி நிறைவடைந்து வீடு செல்லும்போது, இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த மோதலைத் தடுப்பதற்காகக் குறித்த நபர் முயற்சித்துள்ளார்.

அதன்போதே அவர் மீது பெண்ணொருவரால் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், அதன்பின்னர் அங்கிருந்த மற்றொரு பெண்ணால் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் மனைவி, கடந்த 7 நாட்களுக்கு முன்னரே குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளளார்.

Contact Us