“கணவன் கழுத்தை நெறிக்க ,மகன் மூச்சை நிறுத்த. “-அடுத்து பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

 

தமிழகத்தின் திருநெல்வேலி அருகேயுள்ள கல்லிடைகுறிச்சியில் மனைவியை கொலை செய்த கணவன், மகன் கைதாகினர்.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் 48 வயதான முருகன், தனது 47 வயதான மனைவி சங்கரம்மாள், மற்றும் 28 வயதான மகன் தளவாயோடு வசித்து வந்தனர் .இந்நிலையில் அந்த தம்பதிகள் தங்களின் மகன் தளவாய்க்கு திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்காக பெண் பார்த்து வந்தனர் .அப்போது அந்த சங்கரம்மாள் தன்னுடைய அண்ணன் மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் .
பிறகு சங்கரம்மாளின் அண்ணன் மகள் பூவிதாவிற்கும்,தளவாய்க்கும் 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

ஆனால் அந்த பெண் பூவிதா கல்யாணத்திற்கு பிறகும் சங்கரம்மாள் ஏற்பாட்டில் கல்லுாரியில் படிப்பை தொடர்ந்தார். கணவர் தளவாயுடன் குடும்பம் நடத்த வீட்டிற்கு வரவில்லை. இதனால், சங்கரம்மாள் வீட்டில் பிரச்னை ஏற்பட்டது.இதனால் இதற்கு காரணமான சங்கரம்மாளை கொலை செய்ய இருவரும் முடிவெடுத்தனர் .அதனால் நேற்று முன்தினம் மகன் தளவாயும், அவரின் தந்தை முருகனும் சேர்ந்து சங்கரம்மாளை தாக்கி, கழுத்தை நெரித்து ,தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்தனர். பின், அவர் கீழே தவறி விழுந்து இறந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் போலீசார் சந்தேகப்பட்டு அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இருவரும் சங்கரம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பிறகு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Contact Us