அநாதைகளுக்கு அனுப்பிய பணத்தை ஆட்டையை போட்ட ராஜ்சங்கர்- பிடியானை பிறப்பித்த நீதிபதி !

லைக்கா மோபைல் மற்றும் அதன் தொண்டு நிறுவனமான ஞானம் அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த ராஜ் சங்கர் என்னும் நபர், பல லட்சம் ரூபாவை களவாடியுள்ளார் என லைக்கா நிறுவனம் கொழும்பில் வழக்கு தொடுத்துள்ளது. லைக்கா நிறுவனம் அநாதைக் குழந்தைகளுக்கு என்று அனுப்பிய பணம் முதல் கொண்டு, வீட்டுத் திட்டம் வரை பல நிதிகளில் இன் நபர் கையாடல் செய்துள்ள விடையம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில். இதனை விசாரித்த நீதிபதிகள் ராஜ் சங்கரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். கொழும்பில் நடந்த இந்த வழக்கில், ராஜ் சங்கர் குற்றவாளி என இனம் காணப்பட்டுள்ளார் என்று, சற்று முன்னர் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் ..

இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ள ராஜ் சங்கரை, கைது செய்து இலங்கை கொண்டுவருமாறு சர்வதேச பொலிசார்(இன்ரர் போலுக்கும்) அறிவுறுத்தல் ஒன்றை கொழும்பு நீதிமன்றம் அனுப்பியுள்ளதாக மேலும் அறியப்படுகிறது. ஞானம் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் இருந்து பெரும் தொகை நிதியை அவர் கையாடல் செய்தார் என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Contact Us