மீண்டும் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன லக்ஷ்மி மேனன்.. எப்படிப் பார்த்தாலும் நீங்க அழகுதான்

சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அடுத்ததாக வெளியான கும்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

அதனால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் லட்சுமி மேனன் கொடிகட்டி பறந்தார். ஆனால் அதன்பிறகு இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்கததால் ஒரு சில படங்கள் தோல்வியடைய அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறினார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் புலிகுத்தி பாண்டி. இப்படம் நேரடியாக சன்டிவி ஒளிபரப்பாகி டிஆர்பியில் முதலிடத்தை பிடித்தது. தற்போது ஒரு சில பட வாய்ப்புகள் கையில் வைத்துள்ளார்.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தற்போது லட்சுமிமேனன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம லட்சுமி மேனனை இவ்வளவு குண்டாக உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

தற்போது லட்சுமி மேனன் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இயக்குனர்களிடம் வித்தியாசமான கதையாக இருந்தால் படத்தில் நடிப்பதாக கூறி உள்ளார். தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.

 

Contact Us