பரபரப்பான ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்! நடுங்கிப்போன மக்கள்

 

14 வயது சிறுவன் ஒருவர் பட்டப்பகலில் பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரின் அமைந்துள்ள அந்த ரயில் நிலையத்தில் நேற்று மதியத்திற்கு மேல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் இடம்பெற்ற இந்த வன்முறை சம்பவம் ஒன்றில் 14 வயதான Justin McLaughlin உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

இச்சம்பவத்தை படுகாயமடைந்த சிறுவன் ராணி எலிசபெத் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறிது நேரத்திற்கு பின்னர் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிளாஸ்கோ நகரின் அமைந்துள்ள அந்த ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளை நடு நடுங்க வைத்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும், சம்பவத்திற்கு தொடர்பான காரணிகளை விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிஸாருடன் பகிர்ந்து கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது ஒரு கொடூர வன்முறைச் செயல் என குறிப்பிட்டுள்ள பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார், குற்றவாளியை கண்டுபிடிக்க தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளனர்.

Contact Us