முகநூல் காதலில் விழுந்த பாடசாலை மாணவி; பின்னர் நடந்த விபரீதம்

 

தம்புள்ள பகுதியில் முகநூல் மூலம் பாடசாலை மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, அவரது அந்தரங்கப்படத்தை பெற்று, அதை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரின் கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது, மேலும் பல யுவதிகளின் அந்தரங்கப் படங்கள் காணப்பட்டன. சம்பவத்தில் கலலென்பிந்துனுவெவ பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞரையே , தம்புள்ள பொலிசார் பொறிவைத்து பிடித்துள்ளனர்.

கைதான இளைஞர் தம்புள்ளை பகுதியை சேர்ந்த மாணவியை பேஸ்புக் மூலமாக ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, அவரது அந்தரங்கப் படத்தை பெற்றதாக கூறப்படுகின்றது.

அதன் பின்னர், அந்த படங்களை பேஸ்புக்கில் பதிவிடப் போவதாகவும், அப்ப செய்யாமலிருப்பதெனில் 45,000 ரூபா பணம் தர வேண்டுமெனவும் மிரட்டிய நிலையில், கலவரமடைந்த மாணவி சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரிவித்ததையடுத்து, தாயாரால் தம்புள்ளை பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து பொலிசாரின் அறிவுறுத்தல்படி, பணத்தை தருவதாக மாணவி கூறிய நிலையில், அதனை பெறுவதற்காக கடந்த சனிக்கிழமை (16) தம்புள்ளைக்கு இளைஞர் வந்துள்ளார். மாணவி சொன்ன இடத்திற்கு மன்மதராசா சென்ற போது, பொலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து கைதான இளைஞரை பொலிஸார் , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Contact Us