ரிஷாட் வீட்டில் உயிரிழந்த இஷாலினி வழக்கில் திடீர் திருப்பம்!

 

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி இஷாலினி தொடர்பான வழக்கு விசாரணை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் இஷாலினியை பலாத்காரம் செய்தமைக்கு இதுவரை எந்தவித ஆதாரமும் இல்லை என்பதனால் அவருக்கு எதிராக பெரும்பாலும் வழக்கு தாக்கல் செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை இஷாலினி சுவரில் எழுதிய விடயம் மற்றும் அவரது கையெழுத்து அடங்கிய கொப்பி என்பன தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் குறித்த விசாரணை தொடர்பிலான அறிக்கை இதுவரை மன்றில் சமர்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Contact Us