யாழில் காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி; நடுவீதியில் நேர்ந்த சம்பவம்!

 

யாழில் காதலனின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்ற யுவதியை, நடுவீதியில் வழிமறித்து, கன்னத்தில் சகோதரன் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . இந்த சம்பவம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கொக்குவிலிற்கு அண்மையாக காலையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

உயர்கல்விக்காக இரண்டு யுவதிகள் மோட்டார் சைக்கிளில்  யாழ் நகர் பக்கமாக சென்று கொண்டிருந்த நிலையில், கொக்குவிலிற்கு அண்மையாக அந்த யுவதிகளில் ஒருவரின் காதலனான சக மாணவன் அங்கு வந்து  காதலியை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர்கள் சிறிது தூரம் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் அவர்களை நிறுத்தியதுடன் யுவதியின் கன்னத்தில்   அறைந்துள்ளார்.

குடும்பத்தினரின் கண்டிப்பை மீறி, காதலனுடன் தொடர்பு கொள்வதை அறிந்த யுவதியின்   சகோதரன், நேரில் வந்து  அவர்களை கையும் மெய்யுமாக பிடித்து சகோதரியை அறைந்ததுடன்   தனது மோட்டார் சைக்கிளில் சகோதரியை ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

Contact Us