அத்தையை பார்க்கலாமா…? சுட்டி சிறுமியின் நெகிழ்ச்சி செயல்…. குவியும் லைக்குகள்…!!

 

கத்தாரிலுள்ள ஹமத் விமான நிலையத்திற்கு சிறுமி ஒருவர் தனது அத்தையை வழியனுப்பி வைப்பதற்காக வந்தார். இதனையடுத்து சிறுமியின் அத்தை தனது விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்பாக காத்திருப்பு அறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தனது அத்தையை பிரிய மனமில்லாத அந்த சிறுமி கடைசியாக ஒருமுறை அவரை பார்க்க ஆசைப்பட்டார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த சிறுமி அத்த்தையை பார்க்கலாமா என்று அனுமதி கேட்டார்.

அதற்கு பாதுகாப்பு அதிகாரி அனுமதி அளித்ததால் அந்த சிறுமி தனது அத்தையை நோக்கி சென்று அவரை கட்டி அணைத்தார். இதுகுறித்து வெளிவந்த வீடியோவை பார்க்கும் போது மனம் நெகிழ்ச்சியாக இருப்பதாக சமூகதளவாசிகள் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் கோடிக் கணக்கில் லைக்குகள் மற்றும் ஷேர்கள் குவிந்து வருகிறது.

Contact Us