சிக்னலை கவனிக்காத டிரைவர்…. இழுத்து செல்லப்பட்ட கார்…. மருமகள் உட்பட 2 பேருக்கு நடந்த சோகம்….!!

 

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜசன் பிரீத் கவுர், இவரது உறவுக்காரப் பெண்ணான பலம்ப்ரீத் கவுர் மற்றும் மற்றொரு பெண் இவர்கள் 3 பேரும் கல்வி கற்பதற்காகவும், ஆட்டோ மொபைல் தொழிற்சாலையில் பணிபுரியவும் கனடாவுக்கு சென்றிருக்கின்றனர். அப்போது அவர்கள் சென்ற கார் பிராம்ப்டன் அருகிலுள்ள லெவல் கிராசிங்கில் சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜசன் பிரீத் கவுர் மற்றும் மற்றொரு பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் விபத்தில் உறவுக்கார பெண்ணான பலம்ப்ரீத் கவுர் மற்றும் கார் டிரைவர் இருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பலம்ப்ரீத் கவுர் தந்தை கூறியபோது “என் மருமகள் ஜசன் பிரீத் மற்றும் இன்னொரு பெண் இந்த விபத்தில் உயிரிழந்து விட்டனர்.

மேலும் என் மகள் பலம்ப்ரீத் கவுர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்தானது ரயில்வே கிராசிங்கில் சிக்னலை டிரைவர் கவனிக்காததால் நடந்துள்ளது. இதில் சரக்கு ரயில் மோதியதில் கார் ஒரு கிலோமீட்டருக்கு மேல் இழுத்து செல்லப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Contact Us