“வெளிநாட்டில இருக்கிற உன் புருஷன் வர்ரதுக்குள்ள..” -தோழியின் ஆசை வார்த்தையில் சிக்கிய பெண்

 

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்பனந்தாளைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி 30வயதான அனிதா,இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் திடீரென்று அனிதாவின் கணவர் டேவிட் வெளிநாட்டுக்கு வேலை பார்க்க சென்று விட்டார்

அதன் பிறகு தனியாக இருந்த அனிதாவும், அதே ஊரில் வசித்த 28 வயதான சத்யாவும்,பள்ளியில் ஒன்றாக படித்துள்ளனர். இருவரும் ஒரே ஊரில் திருமணம் செய்துள்ளதால் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். சத்யாவின் வீட்டுக்கு அனிதா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அனிதா தன் கணவர் அடிக்கடி வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பியது பற்றி சத்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த சத்யா அனிதாவிடம் நைசாக பேசி, , பல லட்ச ரூபாய் பணத்தையும், 10 சவரன் நகைகளையும் வாங்கியுள்ளார்

சில மாதங்களுக்கு பிறகு தன் கணவர் வெளிநாட்டில் இருந்து ஓரிரு மாதங்களில் திரும்ப உள்ளதால், கொடுத்த நகை, பணத்தை சத்யாவிடமும் அவரின் கணவர் , கார்த்திக்கிடமும் அனிதா கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க விரும்பாமல் அந்த பெண் அனிதாவை கொலை செய்ய திட்டமிட்டனர் .
அதனால் , சத்யா, கார்த்திக், சத்யாவின் சகோதரர் சரவணன், மாமனார் ரங்கநான், ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அனிதாவை அடித்து கொலை செய்தனர். பின் ஐந்து கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்து விட்டனர். போலீசுக்கு இந்த கொலை பற்றி தகவல் தெரிந்ததும் அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

Contact Us