5 வயது சிறுமியை பாக்குதோட்ட குடோனுக்குள்…போக்சோவில் இளைஞர் கைது

 

சாக்லேட் வாங்கித்ருவதாக சொல்லி 5 வயது சிறுமியை பாக்குதோட்ட குடோனுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சிவமொக்கா மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுக்காவில் உள்ளது ஹரதொளலு கிராமம். இக்கிராமத்தில் வசித்து வந்த கணவன் – மனைவி இருவரும் கூலி வேலைக்காக வெளியே சென்றுவிடுவதால் அவர்களின் ஐந்து வயது மகள் வீட்டில் தனியே இருந்து வந்துள்ளாள். அதே கிராமத்தை சேர்ந்த 20 வயது வினய் இதை தெரிந்துகொண்டு சிறுமியின் வீட்டிற்கு சென்று பழகி இருக்கிறான்.

சாக்லேட் வாங்கித்தர்றேன் வர்றியா? என்று கேட்க, அந்த சிறுமியும் சாக்லேட் சாப்பிடும் ஆசையில் வினய் பின்னால் சென்றிருக்கிறாள். பாக்குத்தோட்டத்தில் உள்ள குடோனுக்குள் சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அழுதுகொண்டே இருந்த சிறுமியை அதட்டி உருட்டி அழுகையை நிறுத்தி இருக்கிறார்.

இங்கு நடந்ததை பற்றி யாரிடமும் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். எதுவும் நடக்காதது போல் சிறுமியை வீட்டில் வந்து விட்டுவிட்டு சென்றிருக்கிறார்.

வீட்டில் படுத்துக்கிடந்த சிறுமி, மாலையில் வேலை முடிந்து வந்த பெற்றோரைபார்த்ததும் அழுகை வந்து, வினய் செய்ததை எல்லாம் சொல்லி இருக்கிறாள்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஒலேஒன்னூர் போலீசில் புகாரளித்துவிட்டனர். இளைஞர்வினய்யை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் போலீசார்.

Contact Us