இலங்கையில் ஏழு கோடி பெறுமதியான தங்க கட்டிகளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்கவிமான நிலையத்தில் இருந்து ஏழு கோடி ரூபா பெறுமதியான 4 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தங்க கட்டிகளை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்தபோதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான நபர் விமான நிலைய சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுபவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் விமான நிலையத்திலிருந்து தங்க கட்டிகளை ஆடையில் மறைத்து எடுத்து செல்ல முயற்சித்தபோது சந்தேகித்த சுங்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு சிக்கியதாக சுங்கப் பிரிவின்பிரதி பணிப்பாளரும், ஊடகப்பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளாா்.

Contact Us