சொல்ல சொல்ல கேட்காத மகள்.. போலீஸ்காரருடன் கள்ளக்காதல்.. எரித்தே கொன்ற பெற்றோர்.. பரபர பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ளது செவ்வூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் கனகராஜ்… இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள நண்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இவர்களின் திருமண வாழ்க்கை இனிதாக சென்று கொண்டிருந்த போது, பார்த்திபன் என்பவரால் கவுசல்யா வாழ்வில் புயல் வீச தொடங்கியது. பள்ளியிலும், காலேஜிலும் கவுசல்யாவுடன் ஒன்றாக படித்த நண்பர்தான் பார்த்திபன்.. மதுரையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார் பார்த்திபன்.. இவரை ராமநாதபுரத்தில் சந்தித்துள்ளார் கவுசல்யா… அப்போது இருவரும் செல்போன் நம்பரை பரிமாறி கொண்டுள்ளனர்.. தொடர்ந்து தினமும் செல்போனில் பேசியும் வந்துள்ளனர்.. இதனைக்கண்ட கனகராஜ், கவுசல்யாவை கண்டித்துள்ளார்… ஆனாலும் அவர்களுடைய செல்போன் பேச்சு நிற்கவில்லை… இதனால் கனகராஜ்க்கும் கவுசல்யாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய நண்பரான பார்த்திபனிடம், தன்னை கணவர் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று கவுசல்யா புலம்பியதாக தெரிகிறது.. அதற்கு பார்த்திபன் தன்னோடு வந்துவிட்டால், சந்தோஷமாக வாழலாம் என்றும் சொல்லி உள்ளார்.. இதைக்கேட்ட கவுசல்யாவும் 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மதுரையில் போலீசாக வேலை பார்த்து வரும் பார்த்திபனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, தனது மனைவி காணாமல் போனது குறித்து கனகராஜ் சத்திரக்குடி போலீசில் புகார் அளித்தார்… வழக்கு பதிவு செய்த சத்திரக்குடி போலீசார், கவுசல்யா சென்ற கார் நம்பரை வைத்து அதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என அறிந்து அவரை சத்திரக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு அங்கு கனகராஜ் மற்றும் கவுசல்யாவின் குடும்பத்தினரையும் வரவழைத்து, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரையும் போலீசார் கூறியுள்ளனர்.

மேலும், பெற்றோருடன் சில நாட்கள் இருந்துவிட்டு வரும்படியும், கவுசல்யாவுக்கு பெற்றோர் அறிவுரைகளை சொல்ல வேண்டும் என்றும் கூறி அனுப்பி வைத்தனர். சில நாட்கள் கழித்து கனகராஜ், கவுசல்யாவை சென்று பார்த்துள்ளார்.. சமாதானமாகப் பேசி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றும் கேட்டுள்ளார்.. கவுசல்யாவும் கணவனுடன் கிளம்பி வந்தார், ஆனாலும், தொடர்ந்து கள்ளக்காதலன் பார்த்திபனுடன் பேசியபடியே இருந்துள்ளார்.. இதை கவுசல்யாவின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் வெறுப்படைந்த கவுசல்யா, கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென எலி மருந்தை சாப்பிட்டு வீட்டிற்குள் மயங்கி விழுந்து கிடந்தார்.. இதை பார்த்து பதறிபோன பெற்றோர், அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. 2 நாட்கள் சிகிச்சையும் நடந்துள்ளது. பிறகு, யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.. மறுநாளே, கவுசல்யாவை ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கால்வாய் பகுதியில் வைத்து பெற்றோர் எரித்துள்ளனர்.. எலி மருந்தை சாப்பிட்டு இறந்ததாகவும் அக்கம் பக்கத்தில் காரணம் சொல்லி உள்ளனர்..

இதுகுறித்து தகவலறிந்த அன்டக்குடி விஏஓ, கவுசல்யா பெற்றோரிடம், எங்களுக்கு தகவல் சொல்லாமல் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டு போலீசில் புகாரும் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் நண்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று ஊர் மக்களிடம் விசாரணை செய்தனர்.. பிறகு கவுசல்யாவின் உடல் எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார் அங்கிருந்த சாம்பல் மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.. மேலும் கவுசல்யாவின் பெற்றோரையும் போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.. அப்போது அவர்கள் சொன்னதாவது:நாங்கள் எவ்வளவோ அறிவுரை சொன்னோம்.. எங்கள் பேச்சை கேட்காமல் குடும்ப மானம் போகும் அளவுக்கு, கவுசல்யா கள்ளத்தொடர்பை விடவே இல்லை.. அந்த ஆத்திரத்தில் நானும் எனது கணவரும் மூச்சை பிடித்து அமுக்கி கொலை செய்தோம்” என்று வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர் அமிர்தவல்லி – தென்னரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர் பெற்ற மகளையே பெற்றோர்கள் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us