‘பொல்லாதவன்’ பட பாணியில் பல்சர் பைக் திருட்டு… இளைஞர்களே உஷார்!

புதுச்சேரியில் தனியார் கண்ணாடி தொழிற்சாலை வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.

கடலூர் மஞ்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஆஷிக் (27). இவர் புதுச்சேரி கடலூர் சாலை காட்டுகுப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக ஆக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆஷிக் தனது பல்சர் இரு சக்கர வாகனத்தை தொழிற்சாலை வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே வேலைக்கு சென்று விட்டு வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, இரண்டு மர்ம நபர்கள் ஒன்றாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து ஆஷிகின் பைக்கை திருடிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஆஷிக் கிருமாபாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பல்சர் பைக் திருடர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Contact Us