நீர்கொழும்பில் இடம்பெற்ற அநாகரிக செயற்பாடு – மூன்று பெண்கள் கைது

 

நீர்கொழும்பு கட்டுவா பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு விபசார விடுதியை நிர்வகித்த பெண் மற்றும் இரண்டு சந்தேக நபர்களை நீர்கொழும்பு காவல்துறையினர் நேற்று (ஒக். 19) கைது செய்தனர்.

நீர்கொழும்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை த தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் 29, 31 மற்றும் 38 வயதுடையவர்கள், தங்கொட்டுவ, தயாகம மற்றும் மாதம்பே பகுதிகளில் வசிப்பவர்கள்.

சந்தேக நபர்கள் இன்று (ஒக். 20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் மேலும் நீர்கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us