கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு – முச்சக்கரவண்டி சாரதி திடீர் மரணம்

 

கொழும்பில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு முச்சக்கர வண்டிக்குள்ளேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டி அவரது கட்டுப்பாட்டை மீறி பல வாகனங்களுடன் மோதுண்டமையினால் பரபரப்பான நிலை ஏற்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு ஏற்பட்ட சாரதி ஸ்டீயரிங் மீது விழுந்ததால், முச்சக்கரவண்டி வீதியின் மற்றைய பாதையை நோக்கி வட்டமிட்டு பல வாகனங்கள் மீது மோதியு ள்ளது.

பின்னர் ஜீப் வண்டியில் மோதுண்டு முச்சக்கர நின்றுள்ளது. உயிரிழந்தவர் போலியகொடை பிரதேசத்தை சேர்ந்த சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Contact Us