மப்பு ஏத்தி விட்டுட்டு தப்பு தப்பா நடந்து ..15 வயது பெண்ணுக்கு நடந்த கொடுமை .

 

ஒரு 15 வயதான பெண்ணோடு நட்புடன் பழகி அவருக்கு மப்பு ஏத்திவிட்டு ஒரு வருடமாக பாழாக்கிய வாலிபரை கைது செய்தனர் . டெல்லியின் பரகம்பா சாலை வசிக்கும் ஹிமான்ஷு என்ற வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதான பெண்ணுடன் நட்பு கொண்டு பழகினார் .அதன் பிறகு அவர் அந்த பெண்ணை டெல்லியில் உள்ள கொனாட் பிளேஸில் உள்ள கோஹ்லி ஃப்ரேம் ஆர்ட் கேலரிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கூட்டி சென்றார்.

அங்கு அவர் அந்த பெண் போதையிலிருக்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் அதன் பின்னர் டெல்லியின் துவாரகா மற்றும் பதர்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஒரு வருடமாக அந்த பெண் அந்த நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இப்போது அவரால பாதிக்கப்பட்ட அந்த பெண் அவர் மீது டெல்லியின் பரகம்பா சாலை காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் அந்த ஹிமான்ஷு மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தார்கள் .இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட ஹிமான்ஷுவை போலீசார் கைது செய்தனர். அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.மேற்கொண்டு அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .

Contact Us