தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 100% அனுமதி.. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் வெளியிட்ட அறிவிப்பு..!!

 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்த நடைமுறையானது வரும் 25 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி, 12 வயதுக்கு அதிகமானவர்கள் 2 தவணைத் தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும்.

அவர்களுக்கு இசை நிகழ்ச்சிகள், திரையரங்குகள், ஹாக்கி விளையாட்டுக்கள், திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்குகள் போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை முன்பே வந்துவிட்டது.

எனினும் 50 சதவீத மக்களை மட்டுமே அனுமதித்தனர். ஆனால், வரும் திங்கட்கிழமையில் இருந்து 100 சதவீத மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

Contact Us