எனக்கு உயிர்பிச்சை குடுங்க..! மரண தண்டனை விதித்த நீதிமன்றம்… கண்ணீர்விட்டு கதறிய மீன் வியாபாரி..!!

 

கடந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள Kampung Pangkalan Wakuba என்ற பகுதியில் வசித்து வந்த மீன் வியாபாரியான Hairun Jalmani (55) என்பவரது வீட்டிலிருந்து போதை பொருள் சுமார் 113 கிராமுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் Sabah-ல் உள்ள Tawau உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையில் Hairun Jalmani-க்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது மலேசியாவில் போதைப்பொருள் 50 கிராமுக்கு மேல் வைத்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை நிச்சயமாக வழங்கப்படும்.

அதன்படி சுமார் 113 கிராமுக்கு மேல் போதைப்பொருள் வைத்திருந்ததால் Hairun Jalmani-க்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதையடுத்து அவரை நீதிமன்ற வளாகத்தில் அழைத்து சென்றபோது Hairun Jalman உயிர்ப்பிச்சை கேட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மலேசிய மக்கள் மட்டுமின்றி உலகில் உள்ள பலரும் அவருடைய குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் ? அவரை மன்னித்து விடலாம் என்று தங்களது அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Contact Us