“என் கண் முன்னாடியே கண்டவனை கூட்டி வந்து ….”கண்டித்த தாய்க்கு மகளால் நேர்ந்த கதி

 

தெலுங்கானாவில் உள்ள ஐதராபாதில் உள்ள ராஜேந்திரா நகரை சேர்ந்த, 40 வயது பெண், தன் கணவர் மற்றும் 17 வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த டீனேஜ் பெண் அதே பகுதியில் வசிக்கும் ஒருவரை காதலித்து வந்தார் .அந்த காதலனை அந்த பெண்ணின் தாயாருக்கு பிடிக்கவில்லை .அதனால் அவர் அந்த மகளிடம் அந்த காதலை விடுமாறு கூறினார் .ஆனால் அந்த பெண் அதை கேட்காமல் வீட்டிற்கே அந்த காதலனை கூட்டி வந்து கும்மாளமடித்தார் .
மேலும் அவரின் தாயாரிடம் தான் இவரைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார் .அதை கேட்டு அந்த தாயார் கோபமுற்று அந்த மகளிடம் தான் இதற்கு சம்மதிக்கமாட்டேன் என்றார்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் , தன் காதலருடன் சேர்ந்து, தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவானார் . நேற்று முன்தினம் வேலை முடிந்து அந்த பெண்ணின் கணவர் வீடு திரும்பியபோது, துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் கொலை வழக்கு பதிந்து அந்த காதலர்களை தேடி வருகின்றனர்

Contact Us