“தனியாயிருக்கும் மனைவிக்கு துணையா வர்றீங்களா?”-ஒரு கணவன் செஞ்ச கேவலம்

 

தமிழகத்தின் திருவள்ளூர் அடுத்த, உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த32 வயதான ஜான்சி, ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தார் .இவரின் தந்தை பத்மநாபன் அவரின் மகளுக்கும் திருவள்ளூர் அடுத்த, வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ஓம்குமார் ன்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது .அதனால் தன்னுடைய கணவரை அழைத்து கொண்டு அவர் அமெரிக்கா சென்றார்.அங்கு சென்ற அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ,அந்த கணவர் ஒம்குமார் மட்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு தன் சொந்த ஊருக்கு வந்து விட்டார் .அதன் பிறகு கடந்த ஆண்டு விவகாரத்துக்கு மனு செய்தார் .இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன்பு தன் மனைவியின் போட்டோவை ஒரு திருமண இணையத்தில் வெளியிட்டு ,அவருக்கு வரன் தேடுவதாக விளம்பரம் கொடுத்தார் .அதை பார்த்த பலர் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்து ,விவரம் கேட்டனர் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தான் அதுபோல் எந்த விளம்பரமும் கொடுக்கவில்லை என்று கூறி ,இதை பற்றி போலீசில் புகார் தாதார்

சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம்குமார் தான் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டு, தன் மனைவிக்கு மாப்பிள்ளை தேடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் நேற்று ஓம்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்

Contact Us