காதலன் பேச்சுக்கொடுக்க முதுகு பக்கமாக ஓடிவந்து கணவன் தலையில் அடித்துக்கொன்ற மனைவி

 

காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த கணவனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்திருக்கிறார் மனைவி. ஆனால் அவர் அதிகமாக மது குடித்து இறந்து விட்டதாக மதுக்கடை வாசலில் கொண்டு சடலத்தை வீசிவிட்டு வந்திருக்கிறார். இந்த அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் அரங்கேறியிருக்கிறது.

ராயக்கோட்டையில் உள்ள குட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(45). கூலித் தொழிலாளியான இவர் மனைவி குண்டம்மாள்(35). மாரியப்பனுக்கு மதுப்பழக்கம் இருந்திருக்கிறது. குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவர் அடிக்கடி குண்டம்மாளிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். மாரியப்பன் குண்டம்மாள் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் .

இந்த நிலையில் தன்னை விட வயதில் நான்கு வயது குறைந்த இளைஞர் சிவசங்கர்(31) என்பவருடன் குண்டம்பாளுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ராயக்கோட்டை சஜ்ஜலப் பட்டியை சேர்ந்த சிவசங்கர் ஒரு விவசாயி. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. சிவசங்கரனும் திருமணமானவர்.

சிவசங்கரனும் குண்டம்மாளும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் மாரியப்பனுக்கு தெரியவரவே அவர்களை கடுமையாக கண்டித்திருக்கிறார். தொடர்ந்து மனைவியை கண்டித்து எச்சரித்துக் கொண்டே வந்ததால் மாரியப்பன் இருக்கும் வரையில் உல்லாசமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார் குண்டம்மாள்.
இதுகுறித்து சிவசங்கருடன் ஆலோசனை செய்து இருக்கிறார். அப்போது மாரியப்பனை கொன்று விடலாம் என்று இருவரும் முடிவு செய்திருக்கிறார்கள் . அதன்படி கடந்த 17 ஆம் தேதி அன்று மது குடிப்பதற்காக வெளியே சென்றிருக்கிறார் மாரியப்பன். அப்போது அவருடன் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார் சிவசங்கர்.

மாரியப்பனை வெளியே அழைத்து வந்து ஒரு இடத்தில் நிறுத்தி வைத்துப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் சிவசங்கர். அவர் பேச்சு கொடுக்க, போதையில் இருந்த மாரியப்பனும் பதிலுக்கு பேச்சு கொடுத்துக் கொண்டிருக்க, அப்போது பின்புறமாக ஒளிந்திருந்த மாரியம்மாள் இரும்புக் கம்பியை எடுத்து ஓடி வந்து கணவன் மாரியப்பன் திரும்ப தலையில் ஓங்கி அடித்து இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

டாஸ்மாக் கடை அருகே உடலை தூக்கி வீசி விட்டு சென்று விட்டார்கள். மறுநாள் 18, தேதிஅன்று காணாமல்போன தனது கணவரை தேடியதாகவும் டாஸ்மாக் அருகில் தனது கணவர் உடல் கிடப்பதாகவும் போலீசுக்குதகவல் சொல்லி இருக்கிறார். ஆனால் மாரியப்பனின் தலையிலிருந்த காயத்தை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர். தர்மபுரி அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனையில் மாரியப்பன் தலையில் கூர்மையான ஆயுதத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது என்று அம்மாநில போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் குண்டம்மாள் உண்மையை உளறி இருக்கிறார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Contact Us