” உன்னை காதலிச்சிட்டு அவனோட போக சொல்றியே” -அறுபதாயிரத்துக்கு ஆசைப்பட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

ஒரு பெண்ணை காதலித்து அவரை மற்றொருவருக்கு 60000 ரூபாய்க்கு விற்று விட்டு ஓடிய நபரை போலீஸ் கைது செய்தது

ராஜஸ்தானின் சிகரில் உள்ள கோபால் லால் என்பவர் சிக்கரில் வசிக்கும் ஒரு மைனர் பெண்ணை தனது மைத்துனர் டான்வீருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார் .அதனால் அவர் நீரஜ் என்ற வாலிபரிடம் அந்த மைனர் பெண்ணை தன்னிடம் ஒப்படைத்தால் பணம் கொடுப்பதாக கூறினார் .அதனால் அந்த நீரஜ் அந்த மைனர் பெண்ணை அடிக்கடி தொடர்பு கொண்டு அவர் மனதில் காதலை வளர்த்தார் .அதன் பிறகு அந்த பெண்ணை ஒரு இடத்திற்கு வரவைத்தார் .

பிறகு அந்த நீரஜ் , ரோகிணியைச் சேர்ந்த முஸ்கான் என்பவருடன் சேர்ந்து கொண்டு அந்த மைனர் பெண்ணை ஆக்ராவில் உள்ள அவரின் கூட்டாளியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் .பின்னர் ஆக்ராவில் உள்ள கூட்டாளியின் உதவியுடன், இருவரும் அந்த பெண்ணை சிக்கரில் வசிக்கும் கோபால் லால் என்பவருக்கு ரூ .60,000 க்கு விற்று விட்டு ஓடி விட்டனர்

பின்னர் இந்த வருமானத்தில், ரூ .30,000 நீரஜுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர் .போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த கூட்டத்தை கைது செய்து அவரிடம் இருந்த பணத்தை மீட்டனர்.

Contact Us