கள்ளக்காதலை பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்த நண்பர் கொலை!

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த முகம்மதுஹமீம் என்ற இளைஞர், கடந்த மாதம் 27 ஆம் தேதி காணாமல் போன நிலையில், முகம்மதுஹமீம் தந்தை மூக்கன் ராவுத்தர் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி கெங்குவார்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பு கிணற்றில் மிகவும் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போன மூக்கன் ராவுத்தரை அழைத்து ஆண் சடலத்தை அடையாளம் பார்த்த போது காணாமல் போன அவரது மகன் முகம்மதுஹமீம் என்பது தெரியவந்தது. முகம்மதுஹமீம் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது உறுதிசெய்யப்பட்டத்தை தொடர்ந்து தேவதானப்பட்டி காவல் துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தில் இதில் முகம்மதுஹமீம், ரபீக் ராஜா, ஆசிக் என்ற மூவரும் நண்பர்களாக இருந்த நிலையில் ரபீக்ராஜா ஒரு திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததை அந்த பெண்ணின் கணவரிடம் முகம்மது ஹமீம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரபீக்ராஜா, நண்பர் ஆசிக்குடன் சேர்ந்து அவர்களது நண்பரான முகம்மது ஹமீமை தென்னந்தோப்பிற்கு வரவைத்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்த கிணற்றில் உடலை வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து ரபீக்ராஜா மற்றும் ஆசிக் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கொலைக்கு கத்தி கொடுத்தது, கொலையானவரின் இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்ட விற்பனை செய்தது உள்ளிடவற்றுக்கு உதவியதாக மேலும் அவர்களது நண்பர்களான கருப்பசாமி, பின்னி பாண்டி, பாண்டீஸ்வரன், சேக் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்நிலையில் மேலும் தங்கப்பாண்டி என்பவரை தேவதானப்பட்டி காவல்துறையினர் தேடி வருகின்றனர். நண்பணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்களையும் நீதி மன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Contact Us