முல்லைத்தீவில் வர்த்தகரின் திருவிளையாடல்!! அதிரடிப்படையினரால் கைது!!

 

புதுக்குடியிருப்பில் அரச இலட்சினையினை தவறாக பயன்படுத்தி வாகன இலக்கத்தகடு அச்சிட்ட வணிகர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

அரச இலட்சினையினை தவறாக பயனப்படுத்தி வாகன இலக்கத்தகடு அடித்த குற்றச்சாட்டின் கீழ் 36 அகவையுடை 7 ஆம்வட்டாரம் சிவநகர் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்தவரையே சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

தவறாக அடிக்கப்பட்ட இலச்சினைகள் அதற்க பயன்படுத்திய பொருட்கள் மற்றும் வான இலக்கத்தகடுகள் என்பனவற்றை சிறப்ப அதிரடிப்படையினர் மீட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் இவரை நாளை (20.10.21) அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்

Contact Us