பாடசலை மாணவி உட்பட பல பெண்களுடன் 22வயது சிங்கள மன்மதனின் லீலைகள்!!

 

பாடசாலை மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் கோரிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதுடைய கல்லென்பிந்துனுவெவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர் தம்புள்ளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தம்புள்ளையில் வசிக்கும் பாடசாலை மாணவியை ஏமாற்றி, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்துள்ளதுடன், மாணவியின் படங்களையும் பெற்றுள்ளார்.

அதன்பிறகு அவர் 45,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதுடன், பணம் கொடுக்க மறுத்தால் அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி தாயார் மூலம் தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை குறித்த இளைஞனை மாணவி அழைத்த நிலையில், அவர் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த இளைஞரின் அலைபேசியை ஆய்வு செய்ததில், மற்ற இளம் பெண்களின் நெருக்கமான புகைப்படங்களையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இளைஞனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Contact Us