கனடாவில் இந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட கொடூரம்: நீதிமன்றின் கடுமையான தீர்ப்பு

 

ஒன்ராறியோவில் மனைவி மற்றும் மனைவியின் அம்மாவை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த கொடூர கொலை சம்பவம் ஒன்ராறியோவில் பிராம்ப்டனில் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து தவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிராம்ப்டன் பொலிஸார் கொடூரமாக கொலைசெய்யபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த இருவரின் சடலங்களை மீட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்தவர்களில் ஒருவர், 32 வயதான பல்ஜித் தண்டி எனவும், இன்னொருவர் 60 வயதான தண்டியின் தாயார் அவ்தார் கவுர் எனவும் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் இந்த கொடூர கொலையில் ஈடுப்பட்ட தண்டியின் கணவர் Dalwinder Singh கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் மீது இரு பிரிவுகளில் முதல் நிலை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் முதல் 25 ஆண்டுகளுக்கு பிணை வழங்கப்படாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us