கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

 

கொழும்பு – சேதவத்தை பகுதியில் களனி ஆற்றங்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனதாகக் கூறப்படும் ஐந்து பெண்களின் விபரங்களுடன், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலமைப்பு பொருந்தவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

தலைமுடிக்கு சாயம் பூசப்பட்ட அந்த பெண்ணின் முழங்காலில் கீறல் உள்ளது, அத்துடன், குறித்த பெண்ணுக்கு 50 தொடக்கம் 55 வயது இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த மரணம் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதா? அல்லது கொலையா? என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. முழங்காலில் கீறல் இருந்த போதிலும் உடலில் தாக்குதல் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாகவும், சடலத்தில் இருந்து நாணயத் தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Contact Us