அவருடைய உடலை மீட்டாச்சு..! வங்கக்கடலில் மாயமான தமிழக மீனவர்… இலங்கை கடற்படையின் பரபரப்பு தகவல்..!!

 

கடந்த 18-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்திலிருந்து சேவியர் (32), ராஜ்கிரண் (வயது 30), சுகந்தன் (23) ஆகிய மூன்று தமிழக மீனவர்களும் வங்கக் கடலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் மூவரும் வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்த காரணத்திற்காக அவர்களின் படகை கப்பலைக் கொண்டு மோதி கடலில் மூழ்க செய்துள்ளனர். அதன் பிறகு இலங்கை கடற்படையினர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று தமிழக மீனவர்களில் சேவியர், சுகந்தன் ஆகிய இருவரையும் மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இருவரையும் சிறை பிடித்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் ராஜ்கிரண் மட்டும் கடலில் மூழ்கி மாயமானாத கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று இலங்கை கடற்படை மாயமான தமிழக மீனவரான ராஜ்கிரணின் உடல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதேசமயம் இலங்கை கடற்படை இந்த சம்பவம் தொடர்பில் கூடுதல் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

Contact Us