20 நாட்களுக்கு பின் மகனை சந்தித்த ஷாருக்கான்: கண்ணீர் விட்டழுத தருணம்

 

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆர்யன் கானை, ஷாருக்கான் சந்தித்து பேசியுள்ளார்.

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஷாருக்கான் தன்னுடைய மகனை சந்தித்து பேசியுள்ளார்.

காலை 9 மணிக்கே சிறைச்சாலைக்கு வந்த ஷாருக்கான், 10 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

இதற்கிடையே நேற்று ஆர்யன் கானின் பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிகிறது.

Contact Us