“தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது” அரங்கேறிய கொடூர கொலை

 

தூத்துக்குடி மாவட்டம், புதூர் குமாரகிரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சூரிய ராகவன் (வயது 31). இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சூரியராகவன் எட்டயபுரத்தில் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் சூரியராகவன் கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த மர்ம நபர் ஒருவர். சூரியராகவன் மீது மிளகாய் பொடியை தூவி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற எட்டயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக எட்டயபுரம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற இளைஞரை எட்டயபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். கொலை குறித்து ஆனந்தராஜ் தெரிவித்துள்ள வாக்குமூலத்தில், மகாலட்சுமியும் நானும் உறவினர்கள் என்பதால் பள்ளியிலிருந்து மகாலட்சுமி எனக்கு பழக்கம். அதனால் நான் அவளை காதலித்து வந்தேன். பின்னர் ஒரு நல்ல வேலையில் இருந்ததால் மகாலட்சுமி வீட்டிற்கு சென்று பெண் கேட்கலாம் என நினைத்து வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றேன். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி வந்து பார்க்கையில் மகாலட்சுமி சூரியராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டதை அறிந்து ஆத்திரமடைந்தேன்.

சூரிய ராகவனை தனது வீட்டிற்கு டிவி சரி செய்து தருமாறு அழைத்தேன். வீட்டில் வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டினேன். ஆனால் சூரியராகவன் வீட்டிற்கு வர மறுத்துவிட்டார். கடைக்கு டிவியை கொண்டு வந்து கொடுத்தால் சர்வீஸ் செய்து தருகிறேன் என அவர், கூறியதை தொடர்ந்து எனது வீட்டில் இருந்து டிவியை கொண்டு போய் சூரியராகவன் கடையில் சர்வீசுக்கு கொடுத்தேன். பின்னர் கடையில் வைத்து கொலை செய்ய பலமுறை திட்டம் தீட்டினேன் அது நடக்கவில்லை. ஆனால் எனது கோபம் மகாலட்சுமி மீது அதிகம் இருந்ததால் அவளை முதலில் கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மகாலட்சுமியை கொலை செய்ய திட்டம் தீட்டி, எட்டயபுரம் பேருந்து நிலையம் வந்தேன். அப்போது எதார்த்தமாக மகாலட்சுமியை பார்த்தேன். அப்போது தனது திட்டத்தை நிறைவேற்ற காத்திருந்த போது போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த சமயத்தில் என்னால் கொலை செய்ய முடியவில்லை. பின்னர் நேற்று காலை எட்டயபுரம் டிவி மெக்கானிக் கடை வைத்திருக்கும் சூரிய ராகவன் கடைக்குச் சென்றேன். அங்கு சூரிய ராகவன் இருந்தார். அப்போது நான் மிளகாய் பொடி தூவி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டேன்.தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என கொலை செய்தேன்” என கூறினார்.

Contact Us