“அடப்பாவி படிக்க வந்த பையன இப்படியா பண்ணுவே” -ஒரு வாத்தியாரால் இறந்த மாணவன்

 

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள சுரு மாவட்டத்தில் கோலேசார் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது .அந்த பள்ளியில் ஆசிரியர் மனோஜ் என்பவரிடம் பல மாணவர்கள் கல்வி கற்று வந்தனர் .அவர்களில் கணேஷ் என்ற 13 வயதான மாணவனும் அவரிடம் படித்து வந்தார் .அந்த மாணவன் சரியாக படிக்காததால் அந்த மாணவனை அந்த ஆசிரியருக்கு பிடிக்காமல் போனது .
இந்நிலையில் அந்த மாணவனுக்கு கடந்த வாரம் அந்த ஆசிரியர் ஹோம் ஒர்க் கொடுத்துள்ளார் .ஆனால் அந்த மாணவன் கணேஷ் ஹோம் ஒர்க் செய்யாமலே மறுநாள் பள்ளிக்கு வந்துள்ளார் .உடனே அந்த ஆசிரியர் அந்த மாணவனிடம் ‘ஹோம் ஒர்க் ஏன் செய்யவில்லை’ என்று கேட்டதற்கு ,அந்த மாணவன் எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார் .
அதனால் கோவப்பட்ட அந்த ஆசிரியர் மனோஜ் ஒரு பிரம்பால் அவனை அடித்தார் .அப்போது அந்த மாணவன் வலி தாங்காமல் துடித்தாலும் அதை பொருட்படுத்தாமல் அந்த ஆசிரியர் அவனை அடித்து துவம்சம் செய்தார்.இதனால் அந்த மாணவன் அந்த வகுப்பிலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார் .உடனே அப்பள்ளி நிர்வாகம் அந்த மாணவனின் பெற்றோருக்கு தகவல் கூறியது .அந்த பெற்றோர் அங்கு வந்து அந்த மயங்கி கிடந்த மாணவனை அங்குள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த மாணவர் இறந்தார் .இதனால் போலீஸ் அந்த ஆசிரியரை மீது கொலை வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்

Contact Us