‘என்னை மனிசி இனிப்பு தந்து கொல்லப் பார்க்கிறாள்‘ – பிரான்ஸ் லாச்சப்பில் கடை வைத்திருக்கும் யாழ் குடும்பஸ்தர் பொலிசில் முறைப்பாடு!!

 

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் கடை வைத்திருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 வயதான குடும்பஸ்தர் பொலிசாரிடம் விநோதமான முறைப்பாட்டை செய்துள்ளார். நீரிழிவு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தர் தனது மனைவியை தாக்கியதாக சில நாட்களுக்கு முன் பொலிசாரால் எச்சரிக்கை செய்யப்பட்டார். இந் நிலையில் நேற்று அவர் பொலிசாரிடம் விநோதமான முறைப்பாட்டை செய்துள்ளார். தனக்கு கடுமையான நீரிழிவு நோய் உள்ளதாகவும் அதற்கான மருந்துகளை தான் ஒழுங்கான முறையில் பாவித்து வருவதாகவும் பொலிசாரிடம் குறிப்பட்ட அவர்,

மனைவி தனக்கு தரும் சாப்பாட்டில் மீன் குழம்பு உட்பட அனைத்துக் கறி வகைகளிலும் சீனியை கலந்து வருவதாகவும் தன்னை விரைவில் மரணமடையச் செய்ய மனைவி இவ்வாறான செயற்பாட்டை சூட்சுமமாக செய்கின்றார் எனவும் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மனைவி வைத்த கறிவகைகளையும் பொலிசாரிடம் ஒப்படைப்பதற்காக குளிர்சாதனத்தில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டே பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. வயதுக்கு வந்த இரு சிறுமிகள் உள்ள இத் தம்பதிகளின் பாம்பு, கீரி விளையாட்டால் சிறுமிகளின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தம்பதிகளுக்கு நெருக்கமானவர்கள் மூலம் தெரியவருகின்றது.

Contact Us