வீதியில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு: ஜேர்மனியில் பயங்கர சம்பவம்

ஜேர்மனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து நபரொருவர் தெரு முழுக்க சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இச்சம்பவம் புதன்கிழமை (20) மாலை, ஜேர்மனியின் Frankfurt an der Oder பகுதியில் உள்ள Zschokke strasse சாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின்பால்கனியில் இருந்து சுமார் 39 வயதான இனந்தெரியாத நபர் ஒருவர், தன்னிடமிருந்த துப்பாக்கிகளை வைத்துகொண்டு சாரமாரியாக சாலையில் துப்பாக்கிச்சுடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சுடு சம்பவத்தினை கண்டு மிரண்டுபோன அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த SEK எனும் ஆயுதமேந்திய சிறப்பு பொலிஸ் பிரிவினர் அந்த நபர் இருந்த குடியிருப்பில் நுழைந்து, அங்கு பலத்த ஆயுதங்களுடன் இருந்த அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து, குறித்த குடியிருப்பில் சோதனை செய்த போது,அங்கிருந்த ​​ஏகப்பட்ட துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வாள்கள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட நபர் துப்பாக்கிச் சட்டத்தை மீறியதாக பல குற்றச்சாட்டுகளுடன் பொலிஸ் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அந்த நபர் ஏன் பால்கனியில் இருந்து துப்பாக்கியால் வெறுமென சுட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Contact Us