‘திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம்’…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு….!!

 

சிரியாவில் கடந்த ஆண்டு காட்டுத் தீயானது மூன்று மாகாணங்களுக்கு பரவியது. மேலும் 187 காட்டுத்தீ விபத்தில் 280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் சேதமடைந்தன. குறிப்பாக 32 ,000 ஏக்கர் விவசாய நிலம் தீயில் கருகி நாசமாகியது. இதனை தொடர்ந்து சுமார் 370 வீடுகள் தீக்கிரையாகின. இந்த காட்டுத்தீயினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டதாவது “இது திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம். இந்த காட்டுத் தீ சம்பவத்தை நடத்திய 24 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் காட்டுத்தீயை திட்டமிட்டு செய்தவர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Contact Us