மூன்று மாத பேரக்குழந்தையை அடித்துக் கொன்ற ‘பாசக்கார’ பாட்டி… கோவையில் கொடூர சம்பவம்!

கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்நதவர் பாஸ்கரன் (இன்ஜினியர்), இவரது மனைவி ஐஸ்வரியா. இவர்களுக்கு மூன்று மாத இரட்டைக் குழந்தைகள் (ஆண், பெண்) உள்ளன.

இந்நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பதற்காக, மதுரையில் இருந்து ஐஸ்வரியாவின் தாயார் சாவிந்திரி பாஸ்கரன் வீட்டிற்கு வந்து கடந்த 2 மாதமாக தங்கியிருந்து கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளின் தாய் ஐஸ்வரியா நேற்றிரவு கடைக்கு சென்றிருந்தபோது அவரது தாயாரான சாவித்திரி, தமது பேரபிள்ளையான ஆண் குழந்தையை கொலை செய்துவிட்டு, பேத்தியை (பெண் குழந்தை) கொடூரமாக தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பேரக்குழநதையை கொன்றுவிட்டு தப்பிய பாட்டியை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர். சொந்த பாட்டியே தன் பேரனை கொன்ற கொடூர சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகள் மற்றும் மாப்பிள்ளை மீது சாவித்திரிக்கு வருத்தம் இருந்ததா அல்லது சம்பந்திகளுக்கு இடையே பிரச்னைகள் இருந்தததா?

அதன் விளைவாக பழிவாங்கும் நோக்கத்துடன் குழந்தையை அவர் கொன்றாரா? அல்லது இந்த கொடூர சம்பவத்துக்கு வேறேதும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us