ஜெய்பீம் மிரட்டல் ட்ரைலர்.. 50 வருடமாக அட்ரஸ் கூட இல்லாதவர்களுக்காக இறங்கிப் போராடும் சூர்யா

தன் சொந்த நிறுவனமான 2டி என்ற நிறுவனத்தின் மூலம் ஜெய் பீம் எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய தா. செ. ஞானவேல் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறார். அதாவது பழங்குடி மக்களுக்காக போராடும் ஒரு வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் முன்னாள் நீதியரசர் சத்குருவின் வாழ்க்கை வரலாறு மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பொழுது படத்தின் மீதான ஓரளவு எதிர்பார்ப்பு உருவானது.

 

https://www.youtube.com/watch?v=Gc6dEDnL8JA&t=62s

தற்போது இப்படத்தை சூர்யா சொந்தமாக தயாரித்துள்ளார் அமேசான் பிரைம் வீடியோ படத்தை வெளியிடும் உரிமையை கொடுத்துள்ளார். இதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தையும் தியேட்டரில் பார்க்க முடியாமல் அமேசானில் தான் பார்த்தோம் இந்த படமாவது தியேட்டரில் பார்க்கலாம் என்று இருந்தால் இதுவும் அமேசான்க்கு கொடுத்து விட்டாரே என கூறிவருகின்றனர்.

Contact Us